ஸ்ரீநகர் துலிப் தோட்டம் - ஆசியாவிலேயே மிகப்பெரியது என உலக சாதனை புத்தகம் அங்கீகாரம் / Srinagar Tulip Garden - Recognized by the Book of World Records as the largest in Asia
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜபர்வான் மலையடிவாரத்தில் இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் முயற்சியால் கடந்த 2007-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
74 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர் தோட்டம் ஆகும்.
68 வகையான மொத்தம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இதில் பூத்துக் குலுங்குகின்றன. இந்த தோட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியது என உலக சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது.
ஸ்ரீநகரில் நடைபெற்ற விழாவில் இதற்கான சான்றிதழை காஷ்மீர் நிர்வாக செயலாளர் (மலர், தோட்டம், பூங்கா) பயாஸ் ஷேக்கிடம் உலக சாதனை புத்தக நிறுவன தலைவர் மற்றும் சிஇஓ சந்தோஷ் ஷுக்லா வழங்கினார்.
0 Comments