Recent Post

6/recent/ticker-posts

உலக தடகள கூட்டமைப்பின் துணைத் தலைவராக சுமரிவாலா தேர்வு / Sumariwala selected as vice-president of the World Athletics Federation

  • உலக தடகள கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் தலைவராக பிரிட்டனை சேர்ந்த செபாஸ்டியன் கோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • 2015 முதல் செபாஸ்டியன் கோ தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள் கொண்டது.
  • உலக தடகள கூட்டமைப்பின் விதிகளின் படி 4-வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது. இதனால் 66 வயதான செபாஸ்டியன் கோ, தலைவராக பதவி வகிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும். 
  • துணைத் தலைவர்களாக இந்திய தடகள சங்கத்தின் தலைவர் ஆதில் சுமரிவாலா, கென்யா தடகள சங்கத்தின் தலைவர் ஜாக்சன் டுவி, கொலம்பியாவின் ஸிமெனா ரெஸ்ட்ரேபோ, ஸ்பெயினின் ரால் சாபடோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  • துணைத் தலைவர் பதவிக்கு 8 பேர் போட்டியிட்ட நிலையில் சுமரிவாலா உள்ளிட்ட 4 பேரும் அதிக அளவிலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். 
  • 65 வயதான சுமரிவாலா, துணைத் தலைவர் பதவியில் 4 வருடங்கள் இருப்பார். துணைத் தலைவர்களாக தேர்வாகி உள்ள 4 பேரும், உலக தடகள கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் இடம் பெறுவார்கள்.
  • இதன் மூலம் வலிமையான உலக தடகள நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுமரிவாலா. 
  • நிர்வாகக் குழுவில் தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், மூன்று நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். இந்த குழுவே அனைத்து வகையிலான உயர்மட்ட முடிவுகளையும் எடுக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel