Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு - முதல்வர் தொடங்கிவைத்து இலச்சினையை வெளியிட்டார் / Tamil Nadu Forest and Wildlife Crime Control Unit - Chief Minister inaugurated and released the slogan

  • வனத் துறையின் 2021-22-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மாநில அளவில் திட்டமிடப்பட்ட வன உயிரின குற்றங்களைக் கண்டறிந்து தடுக்க வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
  • அதன்படி, தமிழ்நாடு வனம் மற்றும் வனஉயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டுப்பிரிவு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் நிறுவப்பட்டது. 
  • தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை தொடங்கி வைத்து, இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • திட்டமிட்ட வனம் மற்றும் வன உயிரின குற்றங்களைத் தடுக்கும் வகையில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவு, வன உயிரினக் குற்றங்கள் குறித்த தகவல் மற்றும் நுண்ணறிவு விவரங்களை சேகரித்தல், சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரினப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்தல், உலகளாவிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு செயல்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel