தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பதவி(குரூப் 1சி) பணியில் அடங்கிய 11 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு(கணினி வழித்தேர்வு) கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடந்தது.
முதல்நிலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் இப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்து தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 113 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணையம் வலைதளம் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments