மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் குஜராத்தின் கேவாடியாவில் நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் சிந்தனை அமர்வுக்கு தலைமை வகித்தார் / Union Finance Minister Ms. Nirmala Sitharaman chaired a brainstorming session of the Ministry of Finance and Ministry of Corporate Affairs at Kevadia, Gujarat
நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் மூன்று நாள்சிந்தன் ஷிவீர் இன்று குஜராத்தின் கேவாடியாவில் நிறைவடைந்தது.
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் திரு பங்கஜ் சவுத்ரி மற்றும் டாக்டர் பகவத் கிசான்ராவ் கரத் ஆகியோர் முன்னிலையில் சிந்தனை அமர்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவுப்படி, ஐந்து உறுதிமொழிகளை பின்பற்றி அமிர்த கால இலக்குகளை அடைவது எப்படி என்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் எம்.சி.ஏ.வின் 100 க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளால் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட்டன.
0 Comments