Recent Post

6/recent/ticker-posts

அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா தொடங்கி வைத்தார் / Union Minister Mr. Arjun Munda launched an awareness drive to eradicate Sickle Cell Anemia

  • மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா , அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிப்பதற்கான இயக்கத்தின் ஒரு பகுதியாக 'விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை புதுதில்லியில் இன்று (29-08-2023) தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் மக்களிடையே, குறிப்பாக பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிப்பதற்கான இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. 
  • இந்த இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பகுதிகளில் உள்ள 40 வயதிற்குட்பட்ட 7 கோடி மக்களை பரிசோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 
  • 2023 ஜூலை 1அன்று மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்த இயக்கம் முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel