சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1 / Aditya L-1 successfully launched to explore the outer part of the Sun
பூமியில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ 2008 ஜனவரியில் 'ஆதித்யா-1' என்ற திட்டத்தை அறிவித்தது.
இதில், சுமார் 400 கிலோ எடை கொண்ட விண்கலத்தை பூமியில் இருந்து 800 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தி, சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.
ஆனால், சூரியனின் வெப்பம் மிகுந்த கரோனா மண்டலத்தை, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) என்ற பகுதியில் இருந்து பார்க்கும்போது, துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
அதற்கேற்ப தொழில்நுட்பத்திலும் நாம் வளர்ச்சி பெற்றதையடுத்து, ஆதித்யா-1 திட்டம் 'ஆதித்யா எல்-1' திட்டமாக மாறியது. இதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் வடி வமைத்தனர்.
இதில், வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின.
ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரப் பயணத்துக்கு பின்னர், தரையில் இருந்து 648 கி.மீ. உயரம் கொண்ட, குறைந்த புவி தாழ்வட்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.
0 Comments