TAMIL
பாதுகாப்பு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான இந்தியா-மலேசியா கூட்டு துணைக் குழுவின் 10வது கூட்டம் இன்று (18-09-2023) புதுதில்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் இணைச் செயலாளர் (கடற்படை அமைப்புகள்) திரு ராஜீவ் பிரகாஷ் மற்றும் மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் தொழில் பிரிவின் துணைச் செயலாளர் திரு எரிஸ் ஜெமாடி பின் தாஜுடின் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறி்த்து ஆய்வு செய்யப்பட்டதுடன், பரஸ்பர நலன் தொடர்பான கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்புத் துறை தொடர்பான தற்போதைய தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான பயனுள்ள மற்றும் நடைமுறை ரீதியிலான முன்முயற்சிகளை இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர்.
ENGLISH
The 10th meeting of the India-Malaysia Joint Subcommittee on Defense Science, Technology and Industrial Cooperation was held today (18-09-2023) in New Delhi.
The meeting was jointly chaired by Mr. Rajeev Prakash, Joint Secretary (Naval Systems) of the Department of Defense Production under the Ministry of Defense and Mr. Eris Jemadi Bin Tajudin, Deputy Secretary, Defense Industry Division, Ministry of Defense Malaysia.
During the meeting, existing defense research and industrial cooperation between the two countries was reviewed and ideas of mutual interest were discussed.
Both sides explored effective and practical initiatives to further expand the existing ties in the defense sector.
0 Comments