11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ரூ.2,900 கோடிக்கு மேல் மதிப்புள்ள எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ) 90 உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
செப்டம்பர் 12, 2023 அன்று ஜம்முவில் நடந்த ஒரு நிகழ்வில் இந்த திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நெச்சிபு சுரங்கப்பாதை, மேற்கு வங்கத்தில் இரண்டு விமான நிலையங்கள்; இரண்டு ஹெலிபேடுகள்; 22 சாலைகள் மற்றும் 63 பாலங்கள் இதில் அடங்கும்.
இந்த 90 திட்டங்களில், 36 திட்டங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளன; லடாக்கில் 26; ஜம்மு காஷ்மீரில் 11; மிசோரமில் 5; இமாச்சலப் பிரதேசத்தில் 3; சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு மற்றும் நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் தலா ஒன்று ஆகியவை இடம் பெற்றுள்ளன
0 Comments