12 அதிநவீன சுகோய் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் / Ministry of Defense approves purchase of 12 state-of-the-art Sukhoi fighter jets
உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றாக இந்திய பாதுகாப்புப் படைகள் இருக்கிறது. பாதுகாப்புப் படைகளை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ச்சியாக புது ஆயுதங்களையும் கொள்முதல் செய்து வருகிறது.
அதன்படி இப்போது சுமார் ₹45,000 கோடி மதிப்பிலான ஒன்பது கொள்முதல் திட்டங்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த 12 சுகோய் 30 MKI போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 11,000 கோடி ரூபாய் மதிப்பில் விமானங்கள் மற்றும் அது சார்ந்த கிரவுண்டு திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments