19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. முதலில் நடந்த 50மீட்டர் ரைபிள் ஆடவர் குழுப் போட்டியின் இறுதி ஆட்டம் நடந்தது. அதில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங், ஸ்வாப்னில் குசேலே, அஹில் ஷெரோன் ஆகியோர் அடங்கிய குழு 1769புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது. கூடவே போட்டியின் 7வது நாளான நேற்று முதல் தங்கத்தை சுட்டு தூக்கியது. தொடர்ந்து ஐஸ்வரி பிரதாப் சிங் நடந்த ஆடவர் 50மீட்டர் ரைபிள் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து மகளிர் குழு 10மீட்டர் ஏர் பிஸ்டல் பதக்கப் போட்டி நடந்ததது. அதில் இந்திய வீராங்கனைகள் பாலக் குலியா, ஈஷா சிங், திவ்யா சுப்ராஜூ ஆகியோர் களம் கண்டனர். சீன மகளிர் 1736புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய மகளிர் பாலக், ஈஷா, திவ்யா ஆகியோர் 1721 புள்ளிகள் குவித்து 2வது இடம் பிடித்த வெள்ளியை வசப்படுத்தினர். அதேநேரத்தில் 1723 புள்ளிகள் சேர்த்த தைவான் வெண்கலம் வென்றது.
குழுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் பாலக் குலியா, ஈஷா சிங் ஆகியோர் தனிநபர் மகளிர் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு பதக்கச் சுற்றில் களமிறங்கினர். ஆரம்பம் முதலே எல்லாச்சுற்றுகளிலும் முன்னிலை வகித்த 17வயதான இந்திய வீராங்கனை பாலக் முதலிடம் பிடித்த தங்கத்தை முத்தமிட்டார். அவர் 242.1 புள்ளிகளை குவித்தார். இது நேற்று இந்தியா வென்ற 2வது தங்கமாகும். மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 239.7 புள்ளிகள் சேர்த்து வெள்ளியை வசப்படுத்தினார். ஈஷாவுக்கு இது நேற்று கிடைத்த 2வது வெள்ளி. மொத்தம் 218.2 புள்ளிகள் பெற்ற துப்பாக்கிச் சுடுதலில் ஒரே நாளில் 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களை இந்தியா வென்றது.
ஆசிய விளையாட்டில் ஆடவர் இரட்டையர் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு இந்திய இணையான ராம்குமார் ராமநாதன், சாகித் மைநேனி ஆகியோர் முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதிப் படுத்தினர். இறுதி ஆட்டத்தில் அவர்கள் தைவான் இணையான ஜேசன் ஜங், ஷியோ ஷயூ உடன் மோதினர். அதில் தைவான் இணை 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று தங்கத்தை வசப்படுத்தியது. அதனால் இரண்டாவது இடம் பிடித்த இந்திய இணை வெள்ளியை கைப்பற்றியது.
ஸ்குவாஷ் மகளிர் குழுப் போட்டியில் மகளிர் அரையிறுதியில் ஹாங்காங் மகளிர் அணியிடம் வெற்றிப் வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனைகள் அனஹட்சிங், தன்வி கன்னா, ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பலிகல் ஆகியோர் வெண்கலத்தை வெற்றனர்.
0 Comments