வெம்பக்கோட்டை வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழாய்வில், இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டு சங்கு, வளையல்கள், தங்க அணிகலன்கள், புகைப்பிடிப்பான் கருவி, சுண்ணாம்பு தடவிய சுடுமண் பானைகள், சில்வட்டுகள் உள்ளிட்ட 4,184 பொருள்கள் கிடைத்தன. இந்த நிலையில், சுடுமண்ணாலான குவளை வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
இதுவரை கிடைத்த பொருள்களை வைத்துப் பாா்க்கும் போது இந்தப் பகுதியில் தொழில்கூடங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படுவதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
மேலும், இந்த மாத இறுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும், இதில் கண்டறியப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, இந்தப் பகுதியில் கண்காட்சியாக வைக்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
0 Comments