Recent Post

6/recent/ticker-posts

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், 2017 இன் கீழ் கூடுதல் நிதித் தேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves additional funding requirement for Himachal Pradesh and Uttarakhand under Industrial Development Scheme, 2017

  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் 2017-க்கு ரூ.1164.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், 2017-ஐ 2018 ஏப்ரல் 23, 2018 தேதியிட்ட அறிவிக்கை எண் 2 (2) / 2018-எஸ்பிஎஸ் மூலம் மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.131.90 கோடியாகும். 
  • ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 2021-22 நிதியாண்டில் செலவழிக்கப்பட்டது. மேலும், 2028-2029 ஆம் ஆண்டு வரை உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற கூடுதல் நிதித் தேவை ரூ.1,164.53 கோடியாகும். 
  • இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை ஒதுக்க, தொழில் வளர்ச்சித் திட்டம், 2017ன் கீழ், அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel