துவாரகா செக்டார் 21ல் இருந்து ‘யஷோபூமி துவாரகா செக்டார் 25’ வரை விமானநிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவை விரிவாக்கத்தை பிரதமர் திறந்து வைத்தார் / PM inaugurated extension of Airport Metro Express service from Dwarka Sector 21 to 'Yashobhumi Dwarka Sector 25'
யஷோபூமி துவாரகா செக்டார் 25ல், துவாரகா செக்டார் 21ல் இருந்து புதிய மெட்ரோ நிலையம் ‘யஷோபூமி துவாரகா செக்டர் 25’ வரை தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
புதிய மெட்ரோ நிலையம் மூன்று சுரங்கப்பாதைகளைக் கொண்டிருக்கும் - 735மீ நீளமுள்ள சுரங்கப்பாதை நிலையத்தை கண்காட்சி அரங்குகள், மாநாட்டு மையம் மற்றும் மத்திய அரங்குடன் இணைக்கிறது.
துவாரகா விரைவுச்சாலையின் குறுக்கே நுழைவதை/வெளியேறுவதை இணைக்கும் மற்றொன்று; மூன்றாவது, மெட்ரோ நிலையத்தை ‘யஷோபூமி’யின் எதிர்கால கண்காட்சி அரங்குகளின் லாபியுடன் இணைக்கிறது.
தில்லி மெட்ரோ விமானநிலைய எக்ஸ்பிரஸ் பாதையில் மெட்ரோ ரயில்களின் செயல்பாட்டு வேகத்தை மணிக்கு 90 முதல் 120 கிமீ வேகத்தில் அதிகரிக்கும், இதனால் பயண நேரம் குறையும். ‘புது தில்லி’யிலிருந்து ‘யஷோபூமி துவாரகா செக்டார் 25’ வரையிலான பயணம் சுமார் 21 நிமிடங்கள் ஆகும்.
தௌலா குவான் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ வழியாக யஷோபூமி துவாரகா செக்டார் 25 மெட்ரோ நிலையத்தை பிரதமர் வந்தடைந்தார்.
0 Comments