- ஏர்வேஸ் டிபான்ஸ் அண்ட் ஸ்பைஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21,935 கோடி மதிப்பிலான 56 சி-295 ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்டுள்ள முதல் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம் சமீபத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் உள்ள ஹிந்தன் விமான படைத்தளத்தில் சி-295 ராணுவ போக்குவரத்து விமானத்தை விமான படையில் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சி-295 ராணுவ போக்குவரத்து விமானத்தை விமானப்படையில் முறைப்படி இணைத்தார்.
- தொடர்ந்து ட்ரோன் சக்தி 2023 கண்காட்சியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். சி-295 ராணுவ போக்குவரத்து விமானம் இந்திய விமான படையின் முதல் போக்குவரத்து விமானம் ஆகும்.
0 Comments