Recent Post

6/recent/ticker-posts

ஆசிய விளையாட்டுப் போட்டி - 3 ஆம் நாள் / ASIAN GAMES - 3RD DAY - TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS

ஈக்வெஸ்ட்ரியன் எனப்படும் குதிரையேற்ற விளையாட்டில், டிரெஸ்úஸஜ் அணிகள் பிரிவில் இந்தியாவின் சுதீப்தி ஹலிஜா, திவ்யகிருத்தி சிங், விபுல் ஹிருதய் செதா, அனுஷ் அகர்வல்லா ஆகியோர் அடங்கிய அணி 209.205 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றியது.

சீனா, ஹாங்காங் அணிகள் முறையே அடுத்த இரு பதக்கங்களைப் பெற்றன.  ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் குதிரையேற்றத்தில் இதற்கு முன் கடந்த 1982 எடிஷனில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.  

தனிநபர் ஈவன்டிங் பிரிவில் ரகுவீர் சிங், அணிகள் ஈவன்டிங் பிரிவில் ரகுவீர் சிங், குலாம் முகமது கான், விஷால் சிங், மில்கா சிங் கூட்டணி, தனிநபர் டென்ட் பெக்கிங் பிரிவில் ரூபிந்தர் சிங் பிரார் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர். 

அதன் பிறகு 1986 எடிஷனில் இதே டிரெஸ்úஸஜ் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்ததே கடைசியாக இருந்தது.

சேயிலிங் எனப்படும் பாய்மரப்படகுப் போட்டியில் மகளிருக்கான டிஞ்ஜி ஐஎல்சிஏ-4 பிரிவில் நேஹா தாக்குர் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றார்.

ஆடவர் விண்ட்சர்ஃபர் ஆர்எஸ் எக்ஸ் பிரிவில் எபாதத் அலி மொத்தமாக 52 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel