மகளிர் கிரிக்கெட் டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டும் அடித்த நிலையில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப் போட்டியில், இரு இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இடையேயான வெண்கலப் பதக்கத்துக்கான நேருக்கு நேர் போரில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ருத்ராங்க் பாட்டீலை வீழ்த்தினார். இதன் மூலம் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெண்கலம் பதக்கம் வென்றார்.
ஆடவர் 4 இறுதிப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது. ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
ஆடவர் குவாட்ரூபிள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜாகர் கான், சுக்மீத் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தப் பிரிவில் 2018ல் இந்தியா தங்கம் வென்று இருந்தது
0 Comments