பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.
பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்கள், தில்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநர்கள், சண்டிகர் நிர்வாகி, உறுப்பு மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள், மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகத்தின் செயலாளர், வடக்கு மண்டலத்தில் உள்ள உறுப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பிற மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
0 Comments