மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் இந்த சட்டமசோதாவுக்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாலாம் பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.
மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 215 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒருவர் கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. இது வரலாற்று நிகழ்வு என மாநிலங்களவை தலைவர் குறிப்பிட்டு பேசினார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படட்டதை தொடர்ந்து, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் அந்த சட்ட மசோதா செயலாக்கம் பெரும்.
மக்கள் தொகை கனக்கடுப்பு, மக்களவை தொகுதிகள் மறுவரையறை ஆகியவை செய்த பின்னர் 2026இல் இந்த மசோதா செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments