Recent Post

6/recent/ticker-posts

ஆசிய விளையாட்டுப் போட்டி - 4ஆம் நாள் / Asian Games - Day 4


சீனாவின் ஹாங்சோ நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிப் போட்டிகள் களைகட்டி வருகின்றன. நான்காவது நாளில் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்கனைகள் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தனர். 

மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மனுபக்கர், ஈஷா சிங், சங்வான் ரித்தம் அடங்கிய இந்திய அணி 1,759 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை வென்றது.

மகளிர் 25மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் ஈஷா சிங் 34 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

மகளிர் 50 மீட்டர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தினர். சிஃப்ட் கவுர் சம்ரா 469.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றதுடன், புதிய உலக சாதனையையும் படைத்தார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான ஆஷி 451 .9 புள்ளிகளை கைப்பற்றி வெண்கல பதக்கம் வென்றார்.

துப்பாக்கிச்சுடுதலின் ஆடவர் ஸ்கீட் பிரிவில் , குழு மற்றும் தனிநபர் என இரண்டிலும் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. அத்துடன் ஸ்கீட் தனி நபர் பிரிவில் முதல் முறையாக பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார் ஆனந்த் ஜீத் சிங்.

துப்பாக்கிச்சுடுதலில் நான்காவது நாளில் மட்டும் இரண்டு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர்.

இதேபோன்று பாய்மர படகுப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தார். ஆடவர் ILCA7 பாய்மர படகு பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் 7வது இடத்தில் உள்ளது இந்தியா.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel