Recent Post

6/recent/ticker-posts

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு / Appointment of 5 Judges as Permanent Judges to Madras High Court - President Draupadi Murmu orders


சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் உள்ளனர். இந்த நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் சமீபத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

கொலிஜியம் பரிந்துரையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த பரிந்துரையை செய்துள்ளது. 

கொலிஜியம் பரிந்துரைத்த பட்டியலை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இந்த நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிகள் 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel