வலுவான உள்நாட்டு தேவை, நுகர்வு மற்றும் முதலீடு காரணமாகவே, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதாரம் 7.80 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை பற்றாக்குறையால் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனினும், செப்டம்பர் மாதத்தில் பெய்து வரும் மழை, ஆகஸ்ட் மாத பற்றாக்குறையை ஓரளவு சரி செய்து விட்டது. பங்குச் சந்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்களினால் வரக்கூடிய சிக்கல்கள் எப்போதும் நிலவக் கூடியவையே.
இவற்றின் தாக்கத்தை குறைக்கும் வகையில், மேம்பட்டு வரும் பெரு நிறுவனங்களின் லாபம், தனியார் துறையின் மூலதன உருவாக்கம், வங்கிகள் வழங்கும் கடன்கள் அதிகரிப்பு மற்றும் கட்டுமானத் துறையின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
இதன் காரணமாகவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மூலதன செலவுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாலேயே உள்நாட்டு முதலீடு அதிகரித்துள்ளது.
மேலும், இது மாநில அரசுகளையும், அவற்றின் மூலதன செலவை அதிகரிக்க உத்வேகம் அளித்துள்ளது. சேவை துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிகர ஏற்றுமதியின் பங்கு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்துள்ளது.
வங்கி துறையை பொறுத்தவரை, வாராக்கடன்கள் குறைந்துவருகின்றன. மார்ச் 2023 தரவுகளின்படி, வங்கிகள் அல்லாத பிற நிதி நிறுவனங்களின் லாபமும், அவர்கள் துணிந்து மேற்கொள்ளும் முடிவுகளும் அதிகரித்து உள்ளன.
0 Comments