Recent Post

6/recent/ticker-posts

96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றம் 'அரசியல்சாசன அவை' என அழைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு / 96-year-old Parliament to be called 'Samvidan Sadan' - PM Modi announcement


நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் பற்றி நேற்று முன்தினம் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்கள், புதிய நம்பிக்கையுடன் புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழைவர் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற பழைய கட்டிடத்துக்கு பிரியா விடையளிக்கும் வகையில் மைய மண்டபத்தில் நேற்று கடைசியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

விநாயகர் சதுர்த்தி புனித நாளில் நாம் இங்கிருந்து விடைபெற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்கிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியுடனும் தீர்மானத்துடனும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நாம் செல்கிறோம்.

இந்த அவையில்தான் அரசியல் சாசனம் உருவானது. இந்த மைய மண்டபத்தில் நாட்டின் தேசியக் கொடியும், தேசிய கீதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை பழைய நாடாளுமன்றம் என நாம் அழைக்கக் கூடாது.

இதை 'சம்விதான் சதன்' (அரசியல்சாசன அவை) என அழைக்க அனுமதிக்கும்படி மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அதன்பின் அனைத்து எம்.பி.க்களும் பிரதமர் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நடந்து சென்றனர்.

நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் ஆங்கிலேய கட்டிடக் கலை நிபுணர்கள் சர் எட்விட் லத் யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பழைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel