அதிநவீன அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு / Built with state-of-the-art features, Mahendragiri Warship is dedicated to the nation
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர் இந்தப் போர்க் கப்பலை நாட்டுக்கு அறிமுகம் செய்தார்.
கடற்படைக்காக `புராஜக்ட் 17 ஆல்ஃபா' (பி17ஏ) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 7வது போர்க் கப்பல் மகேந்திரகிரியாகும். எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், அதிநவீன ஆயுதங்கள், தொலையுணர்வு சாதனங்களுடன் கூடிய இந்தப் போர்க் கப்பல், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி வல்லமையின் அடையாளமாக திகழும்.
0 Comments