பி.டி.ஐ., எனப்படும், 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' செய்தி நிறுவன இயக்குனர்களின் ஆண்டு கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில், பி.டி.ஐ.,யின் புதிய தலைவராக, கே.என்.சாந்த் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பதவியை, 'ஆனந்த பஜார் பத்திரிகா'வின் அவீக் சர்க்கார் கடந்த இரண்டு ஆண்டுகளாக வகித்து வந்தார். 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் தலைமை செயல் அதிகாரியான பிரவீன் சோமேஷ்வர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரை தவிர, 'தினமலர்' நாளிதழின் இல.ஆதிமூலம், 'டைம்ஸ் ஆப் இந்தியா'வின் வினீத் ஜெயின், 'தி ஹிந்து'வின் என்.ரவி, 'தி எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் விவேக் கோயங்கா, முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் உட்பட, 16 பேர் பி.டி.ஐ., உறுப்பினர்களாக உள்ளனர்.
0 Comments