தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து, தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதி திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 புத்தொழில் நிறுவனங்களில் ரூ.10.85 கோடி பங்கு முதலீட்டுக்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, குறு, சிறு,நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண்ராய், புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
0 Comments