அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தின் யூஜின் சிட்டியில் இன்று (செப்.,17) நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடந்தது.
இதில் 83.80 மீ. தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை கைப்பற்றினார். முதல் இடத்தில் செக் குடியரசின் ஜக்குப் வட்லெஜ்ச் தனது இறுதி முயற்சியில் 84.24மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
பின்லாந்தின் ஆலிவர் ஹெலண்டர் 83.74 எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஆண்ட்ரியன் மார்டரே (81.79 மீ), கர்டிஸ் தாம்சன் (77.01 மீ), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (74.71 மீ) ஆகியோர் முறையே நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.
0 Comments