TAMIL
கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2023 / KALAIGNAR KARUNANIDHI SEMMOZHI TAMIL AWARD 2023: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.9.2023) தலைமைச் செயலகத்தில், 2023-ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் க. இராமசாமி அவர்களுக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும் வழங்கிக் கௌரவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் அவர்களின் கனவினை நிறைவேற்ற, நடுவண் அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில், 2006-இல் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.
பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார்.
ENGLISH
KALAIGNAR KARUNANIDHI SEMMOZHI TAMIL AWARD 2023: Tamil Nadu Chief Minister M.K.Stalin today (5.9.2023) at the Chief Secretariat, the former Deputy Director of the Institute of Indian Languages Dr.K. Ramasamy honored Artist M. Karunanidhi Classical Tamil Award with a prize money of Rs 10 lakh, a certificate of appreciation and a bronze statue of Artist M. Karunanidhi.
Due to the efforts of Muthamizharinagar Kalainar, Tamil was declared as the classical language for the first time in India in 2004. The Institute was established in 2006 as a part of the Institute of Indian Languages in 2006 on the basis of Muthamizharinagar's continuous insistence on the central government to fulfill his dream of starting an institution with a unique focus on classical Tamil.
Later, in 2008, it was set up as an autonomous institution in Chennai as Central Institute of Classical Tamil Studies. The Chairman of the Central Institute of Tamil Studies is the Hon'ble Chief Minister of Tamil Nadu.
0 Comments