TAMIL
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழகத்தில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு தமிழக அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தரமான கண் சிகிச்சையை எளிதாகவும், குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளை அமைத்துள்ள பெரிய வலையமைப்பு கொண்ட குழுமமாகும்.
இக்குழுமம், தமிழகத்தில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிசிக்சை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ENGLISH
Tamil Nadu Chief Minister M.K. In an event held on behalf of Industry, Investment Promotion and Commerce Department in the presence of Stalin, Maxivision Super Specialty Eye Hospitals Pvt Ltd signed an MoU between the Government of Tamil Nadu and the Maxivision Group to set up 100 eye care centers in Tier 2 and Tier 3 cities in Tamil Nadu with an investment of Rs 400 crore and employment to 2000 people. carried out.
Aiming to provide quality eye care with ease and cost-effectiveness, Maxivision Super Specialty Hospitals Pvt Ltd is a large networked conglomerate with 42 multi-purpose specialty eye hospitals in the states of Tamil Nadu, Telangana, Gujarat, Andhra Pradesh and Kerala. The group plans to set up 100 eye examination centers in tier 2 and tier 3 cities in Tamil Nadu.
0 Comments