மக்களவையில் இன்று (18.09.2023) நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை சிறப்பு அமர்வு நடைபெறுகிறது.
இதில் அவையில் உரையாற்றிய பிரதமர், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நடவடிக்கைகள் மாற்றப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர இன்று ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
0 Comments