பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves expansion and extension of Prime Minister's Ujjwala Yojana
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா (பி.எம்.யு.ஒய்) திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2023-24-ம் நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் உஜ்வாலா இணைப்புகளை வழங்குவதன் மூலம் பி.எம்.யு.ஒய் எனப்படும் பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும்.
இந்தத் திட்டத்தில் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கு ரூ. 200 வீதம் 12 சிலிண்டர்கள் வரை மானியம் வழங்கப்படுகிறது.
நாட்டில் 2014-ம் ஆண்டு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நுகர்வோர் எண்ணிக்கை 14 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு 32 கோடியாக அதிகரித்துள்ளது.
0 Comments