டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் ஆன்டிகுவா - பார்புடா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between India and Antigua-Barbuda for cooperation in sharing solutions for digital transformation
பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆன்டிகுவா-பார்புடாவின் தகவல், தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே மக்கள் மத்தியிலான டிஜிட்டல் மாற்றத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூன் 13 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தும். அத்துடன் அனுபவங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments