Recent Post

6/recent/ticker-posts

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - நோவக் ஜோகோவிச் சாம்பியன் / US Open Tennis - Novak Djokovic Champion

  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதினார். 
  • 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
  • அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். 36 வயதான அவர், கடந்த 2011, 2015, 2018-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்றிருந்தார். 
  • மேலும் அமெரிக்க ஓபனில் அதிக வயதில் பட்டம் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் பெற்றள்ளார். ஒட்டுமொத்தமாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் கைப்பற்றியுள்ள 24-வது பட்டம் இதுவாகும். அவர், ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும், விம்பிள்டனில் 7 முறையும் கோப்பையை வென்று குவித்துள்ளார்.
  • கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் அதிக முறை பட்டங்கள் வென்றிருந்த ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையையும் சமன் செய்துள்ளார் ஜோகோவிச். இருவரும் தலா 24 பட்டங்களை வென்றுள்ளனர். 
  • மேலும் ஒரே ஆண்டில் நடைபெறும் 4 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் 3 பட்டங்களை 4-வது முறையாக வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஜோகோவிச். இந்த ஆண்டில் அவர், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடர்களிலும் தற்போது அமெரிக்க ஓபனிலும் வாகை சூடியுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel