பெண் சக்தியை வணங்கும் சட்டம் எனப்படும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விரிவான விவாதம் நடந்தது.
எதிர்க்கட்சிகளின் காரசார விவாதங்களுக்கு பின் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக இரண்டு பேரும் ஓட்டளித்தனர். ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.பி.,க்கள் எதிர்த்து ஓட்டளித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து, லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின், மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வரும் இந்த இடஒதுக்கீடு மசோதா இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைக்கு வந்தால், லோக்சபாவில் பெண் எம்.பி.,க்களின் எண்ணிக்கை தற்போதுள்ள, 81ல் இருந்து, 181 ஆக உயரும். மாநில சட்டசபைகளிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
0 Comments