தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உயர் கல்வி போன்ற முக்கிய துறைகள் இந்த வளர்ச்சித் திட்டங்களில் அடங்கும். நிகழ்ச்சியின் போது, காணொலி மூலம் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேசிய நெடுஞ்சாலை -163 ஜி இன் வாரங்கலில் இருந்து கம்மம் பிரிவு வரை 108 கி.மீ நீளமுள்ள 'நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை' மற்றும் என்.எச் -163 ஜி இன் கம்மம் முதல் விஜயவாடா பிரிவு வரை 90 கி.மீ நீளமுள்ள 'நான்கு வழி அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட கிரீன்ஃபீல்டு நெடுஞ்சாலை' ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். சுமார் ரூ.6400 கோடி செலவில் இந்த சாலை திட்டங்கள் உருவாக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை 365 பிபியின் சூர்யபேட்டை முதல் கம்மம் வரையிலான 59 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலை திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ.2,460 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த திட்டம் ஹைதராபாத் - விசாகப்பட்டினம் நடைபாதையின் ஒரு பகுதியாகும்
0 Comments