மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும் ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் இணைந்து ஹரியானாவில் மொத்தம் 15 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை இன்று (20-10-2023) தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல் இயக்குநர் திருமதி லலிதா சர்மா மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் 1000 கேலோ இந்தியா மையங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
0 Comments