Recent Post

6/recent/ticker-posts

தெலங்கானா மாநிலத்தில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009-ல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves amendment to Central Universities Act, 2009 for establishment of Sammakka Sarakka Central Tribal University in Telangana State

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி, தெலங்கானா மாநிலத்தின் முலுகு மாவட்டத்தில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009-ஐ மேலும் திருத்துவதற்கான மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதா, 2023 ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக, ரூ. 889.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இப்புதிய பல்கலைக்கழகம் மாநிலத்தில் உயர்கல்வியின் அணுகலை அதிகரிப்பது, தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களின் நலனுக்காக பழங்குடி கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அறிவு முறை ஆகியவற்றில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை வழங்கும். 

இதன் மூலம் உயர்கல்வியில் மேம்பட்ட அறிவு வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்தப் புதிய பல்கலைக்கழகம் கூடுதல் திறனை உருவாக்குவதுடன், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முயற்சிக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel