செப்., மாத ஜிஎஸ்டி வசூல் 1,62,712 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. இதில் சிஜிஎஸ்டி மூலம் ரூ.29,818 கோடியும் எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,657 கோடியும் ஐஜிஎஸ்டி மூலம் ரூ.83,623 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,145 கோடியும் சேர்த்து) செஸ் வரி மூலம் ரூ.11,613 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.881 கோடியும் சேர்த்து) அடங்கும்.
2023 செப்., மாத ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்த 2022 செப், மாதம் வசூல் ஆன தொகையை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டுவது இது நான்காவது முறையாகும்.
செப்., மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிஎஸ்டி மூலம் ரூ.9,92,508 கோடி வசூல் ஆகி உள்ளது.
0 Comments