Recent Post

6/recent/ticker-posts

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 / GLOBAL MARITIME INDIA SUMMIT 2023

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 / GLOBAL MARITIME INDIA SUMMIT 2023

TAMIL

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பதிப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.10.2023) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047 என்ற செயல்திட்ட வரைவையும் பிரதமர் வெளியிட்டார்.

இந்த எதிர்காலத் திட்டத்திற்கு இணங்க, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047-உடன் இணைந்த ரூ. 23,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் 3-வது பதிப்பிற்கு அனைவரையும் வரவேற்றார். முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2016 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்றது. இரண்டாவது கடல்சார் உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

ENGLISH

Prime Minister Shri Narendra Modi inaugurated the third edition of Global Maritime India Summit 2023 today (17.10.2023) through a video presentation. The Prime Minister also released a draft action plan for India's Ocean Blue Economy Vision 2047.

In line with this future plan, aligned with India's Maritime Blue Economy Vision 2047, Rs. The Prime Minister inaugurated projects worth more than 23,000 crores and dedicated various projects to the country and laid foundation stones for new projects. The summit provides an excellent platform to attract investments in the country's maritime sector.

Addressing the gathering, the Prime Minister welcomed everyone to the 3rd edition of the Global Maritime India Summit 2023. The first Maritime India Summit was held in Mumbai in 2016. A second Maritime Summit will be held via video in 2021.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel