Recent Post

6/recent/ticker-posts

மருத்துவம் அல்லது உடலியலுக்கான நோபல் பரிசு 2023 / NOBEL PRIZE FOR MEDICINE OR PHYSIOLOGY 2023

மருத்துவம் அல்லது உடலியலுக்கான நோபல் பரிசு 2023 / NOBEL PRIZE FOR MEDICINE OR PHYSIOLOGY 2023

TAMIL

மருத்துவம் அல்லது உடலியலுக்கான நோபல் பரிசு 2023 / NOBEL PRIZE FOR MEDICINE OR PHYSIOLOGY 2023: நடப்பாண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும், வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசு புதன்கிழமையும், இலக்கியத்துக்கான் நோபல் வியாழக்கிழமையும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்படவிருக்கின்றன.

2023 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மிகவும் வெற்றிகரமான இரண்டு எம்ஆர்என்ஏ அடிப்படையிலான கரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தின. அதன் மூலம், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர்.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன், அடிப்படை மூலக்கூறு மாற்றியமைக்கப்பட்ட எம்ஆர்என்ஏ, எதிர்வினைகளை செயல்படுத்துவதைத் தடுக்கவும் மற்றும் செல்களுக்கு எம்ஆர்ஏன்ஏ வழங்கப்படும் போது புரத உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது என்பதைக் கண்டறிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மருத்துவப் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் தங்கள் முடிவுகளை 2005 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் வெளியிட்டிருந்தனர். ஆனால் அது அந்த நேரத்தில் அதிக கவனம் பெறவில்லை. 

ஆனால் கரோனா தொற்றுநோய்களின் போது மனிதகுலத்த்தைக் காப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.

இதன்மூலம்தான், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா தொற்றுநோய்க்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

எனவே மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படவிருக்கிறது.

ENGLISH

NOBEL PRIZE FOR MEDICINE OR PHYSIOLOGY 2023: Announcements for this year's Nobel Prize began on Monday. The Nobel Prize for Physics will be announced on Tuesday, the Nobel Prize for Chemistry on Wednesday, the Nobel Prize for Literature on Thursday and the Nobel Prize for Economics on Friday.

The discoveries of 2023 Nobel laureates Katalin Carrico and Drew Weissman have made it possible for two highly successful mRNA-based corona vaccines to be approved in the late 2020s. Through it, millions of people were saved all over the world.

Nobel laureates in medicine Katalin Carrico and Drew Weissman are reported to have discovered that basic molecular modification of mRNA can be used to block activation reactions and increase protein production when mRNA is delivered to cells.

2023 Medicine Laureates Katalin Carrico and Drew Weissman published their results in a 2005 paper. But it didn't get much attention at the time. But it laid the groundwork for the advancements in measures taken to protect humanity during the Corona pandemic.

This was the main reason for the development of effective mRNA vaccines against the Corona pandemic that started spreading around the world in early 2020. Therefore, they are going to be awarded the Nobel Prize for their outstanding contribution to the field of medicine.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel