இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்.ஏ.எல்) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 'ஒற்றுமைக்கான ஓட்டம்' நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
1.5 கி.மீ ஓட்டத்தை ஹஸ்ரத்கஞ்சில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே இருந்து பாதுகாப்பு அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் கே.டி.சிங் பாபு விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.
பள்ளி மாணவர்கள், என்.சி.சி அணியினர், தடகள வீரர்கள், ஓட்டப்பந்தய ஆர்வலர்கள், எச்.ஏ.எல் வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் ஓட்டத்தில் பங்கேற்றனர்.
0 Comments