Recent Post

6/recent/ticker-posts

அந்தமான், நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு ஆகியவற்றில் குத்தகை ஒழுங்குமுறை, 2023 அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Notification of Tenancy Regulation, 2023 in Andaman, Nicobar Islands, Dadra and Nagar Haveli, Daman and Diu, Lakshadweep

Union Cabinet approves Notification of Tenancy Regulation, 2023 in Andaman, Nicobar Islands, Dadra and Nagar Haveli, Daman and Diu, Lakshadweep

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பின் 240 வது பிரிவின் கீழ் அந்தமான், நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு ஆகியவற்றில் குத்தகை ஒழுங்குமுறை, 2023 -ஐ அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த யூனியன் பிரதேசங்களின் வளாகங்களை வாடகைக்கு எடுப்பதற்கு, பொறுப்பான மற்றும் வெளிப்படையான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட கட்டமைப்பை இந்த அறிவிப்பு வழங்கும்.

இந்த விதிமுறைகள் வாடகை சந்தையில் தனியார் முதலீடு மற்றும் தொழில்முனைவுக்கு ஊக்கமளிக்கும், புலம்பெயர்ந்தோர், அமைப்புசார்ந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு வருவாய் பிரிவுகளுக்கு போதுமான வாடகை வீடுகள் கிடைப்பதை உறுதிசெய்யும்; தரமான வாடகை வீட்டிற்கான அணுகலை அதிகரிக்கவும் இது உதவும்.



Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel