2024-25 சந்தைப் பருவத்தில், ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மைசூர் பயறு வகைக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.425 ஆகவும், ராப்சீட் மற்றும் கடுகுக்குக் குவிண்டாலுக்கு ரூ.200 ஆகவும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மற்றும் குங்குமப்பூவுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.150 உயர்த்தப்படுகிறது. பார்லி மற்றும் கடலைக்கு முறையே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.115 மற்றும் ரூ.105 உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2024-25 சந்தைப்பருவத்திற்கான ரபி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி, குறைந்தபட்ச ஆதரவு விலையை அகில இந்திய அளவில் மதிப்பிடப்பட்ட சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொண்டுள்ளது.
இதையடுத்து ராப்சீட் மற்றும் கடுகுக்கு 98 சதவீதம்; பருப்புக்கு 89 சதவீதம்; உளுந்துக்கு 60 சதவீதம்; பார்லிக்கு 60 சதவீதம்; குங்குமப்பூவுக்கு 52 சதவீதம் அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதுடன், பலவகையான பயிர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
0 Comments