சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர், ஜக்தல்பூரில் சுமார் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid foundation stones for various development projects worth around Rs 27,000 crore in Bastar, Jagdalpur, Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார், ஜக்தல்பூரில் சுமார் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாகர்னாரில் ரூ.23,800 கோடிக்கு மேல் மதிப்புடைய என்.எம்.டி.சி எஃகு நிறுவனத்தின் எஃகு ஆலையை அர்ப்பணிப்பதும், பல ரயில்வே மற்றும் சாலை திட்டங்களும் இதில் அடங்கும். தரோகி - ராய்ப்பூர் மின்சார ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
0 Comments