Recent Post

6/recent/ticker-posts

சிறப்பு இயக்கம் 3.0-ன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோப்புகளை நிலக்கரி அமைச்சகம் ஆய்வு செய்தது / The Ministry of Coal examined more than one lakh files during the second and third weeks of Special Operation 3.0

சிறப்பு இயக்கம் 3.0-ன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோப்புகளை நிலக்கரி அமைச்சகம் ஆய்வு செய்தது / The Ministry of Coal examined more than one lakh files during the second and third weeks of Special Operation 3.0

சிறப்பு இயக்கம் 3.0-ன் செயலாக்கக் கட்டமான இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில், நிலக்கரி அமைச்சகமும் அதன் பொதுத்துறை நிறுவனங்களும் இயக்கத்தின் ஆயத்த கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சுமார் 50,59,012 சதுர அடி நிலப்பரப்பில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி ரூ.28.79 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதுவரை மொத்தம் 1,08,469 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 8,088 பழைய கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதுதவிர, 80,305 மின் கோப்புகளை ஆய்வு செய்த பின்னர், 29,993 கோப்புகள் இணையத்தில் மூடப்பட்டுள்ளன.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க, ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (ஈ.சி.எல்) திடக்கழிவு மேலாண்மை அலகை நிறுவியுள்ளது, இது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மதிப்புமிக்க வளமாக மாற்றியுள்ளது.

சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் ஈ.சி.எல் நிறுவனத்தால் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜ்மஹால் பகுதியில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், சோனேபூர் பசாரி பகுதியில் சிஐஎஸ்எஃப் முகாம் மற்றும் முக்மு பகுதியில் கட்டப்பட்டுள்ளன.

62 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணி அனைவரின் தன்னெழுச்சியான பங்கேற்புடன் பெரும் வெற்றி பெற்றது.

இந்த சிறப்பு இயக்கம் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. கழிவுப்பொருள் மேலாண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது. இது மற்றவர்கள் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel