ராஜஸ்தானின் ஜோத்பூரில் சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம், உயர்கல்வி போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்தத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸில் 350 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை மையம். தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவு பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் 7 தீவிர சிகிச்சை பிரிவுகள், ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடத்தை உருவாக்குதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
ஐ.ஐ.டி ஜோத்பூர் வளாகத்தையும், உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அர்ப்பணித்தார். பல சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 145 கி.மீ தொலைவிலான தேகானா-ராய் கா பாக் மற்றும் 58 கி.மீ தொலைவிலான தேகானா-குச்சமான் நகர ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட மேலும் இரண்டு ரயில் திட்டங்களை அர்ப்பணித்தார்.
ஜெய்சால்மரை தில்லியுடன் இணைக்கும் ருனிச்சா எக்ஸ்பிரஸ், மார்வார் சந்திப்பு - காம்ப்ளி பகுதியை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில் ஆகிய இரண்டு புதிய ரயில் சேவைகளை ராஜஸ்தானில் திரு மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
0 Comments