பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தேசிய வேலைவாய்ப்பு விழாவில் உரையாற்றியதோடு, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000த்திற்கும் அதிகமானோர்க்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.
ரயில்வே அமைச்சகம், அஞ்சல் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசுப் பணியில் சேர்வார்கள். பிரதமர் உரையின்போது நாடு முழுவதும் 37 இடங்கள் விழாவுடன் இணைக்கப்பட்டன.
மத்திய அரசு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு விழாக்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கபட்டுள்ளன.
0 Comments