Recent Post

6/recent/ticker-posts

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated 511 Pramod Mahajan Rural Skill Development Centers in Maharashtra

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated 511 Pramod Mahajan Rural Skill Development Centers in Maharashtra

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த மையங்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை நடத்தும்.

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக கிராமிய திறன் மேம்பாட்டு மையங்கள் பல்வேறு துறைகளில் அதற்கானப் பயிற்சிகளை நடத்தும்.

ஒவ்வொரு மையமும் குறைந்தது இரண்டு தொழிற்கல்வி படிப்புகளில் சுமார் 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும். இப்பயிற்சியை தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலின் கீழ் உள்ள தொழில் கூட்டாளிகள் மற்றும் முகமைகள் வழங்கும்.

இந்த மையங்களை நிறுவுவதன் மூலம் இப்பகுதி மிகவும் திறமையான மனிதவளத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel