மஹாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர், ஷீரடியில் சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களில் அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை, குர்துவாடி-லாத்தூர் சாலை ரயில் பிரிவு மின்மயமாக்கல் (186 கி.மீ), ஜல்கானிலிருந்து பூசாவலை (24.46 கி.மீ) இணைக்கும் 3 -வது மற்றும் 4 -வது ரயில் பாதைகள்; தேசிய நெடுஞ்சாலை 166-ல் சாங்லி முதல் போர்கான் வரையிலான நான்கு வழிச்சாலை (தொகுப்பு-1); மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மன்மத் முனையத்தில் கூடுதல் வசதிகள்.
அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தாய் -சேய் நலப் பிரிவுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் மற்றும் ஸ்வமித்வா அட்டைகளையும் திரு மோடி வழங்கினார்.
நில்வாண்டே அணையின் இடது கரை (85 கி.மீ) கால்வாய் கட்டமைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்து ஷீரடியில் தரிசனம் செய்வதற்கான புதிய வரிசை வளாகத்தை திரு மோடி திறந்து வைத்தார். மேலும் 86 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் விவசாயிகளுக்கான நிதி ஆதரவுத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, ஷீரடி சாய்பாபா சமாதி கோயிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்த பிரதமர் மோடி, நில்வாண்டே அணையின் ஜல பூஜையையும் செய்தார்
0 Comments