பீகார் மற்றும் ஜார்க்கண்டில் வடக்கு கோயல் நீர்த்தேக்கத் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க, 2017 ஆகஸ்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,622.27 கோடி (மத்திய அரசின் பங்கு: ரூ.1,378.60 கோடி) என்பதற்கு மாறாக ரூ.2,430.76 கோடி மதிப்பீடு (மத்திய அரசின் பங்கு: ரூ.1,836.41 கோடி) என்ற ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
எஞ்சியுள்ள பணிகள் முடிந்ததும், ஜார்கண்ட் மற்றும் பீகாரில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஆண்டுக்கு கூடுதலாக 42,301 ஹெக்டேருக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்.
0 Comments